பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களுக்கு பிறகு சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் வாலிபராஜா. அவருடன் சேது, விசாகா சிங், ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, தேவதர்ஷினி, விடிவி.கணேஷ் என கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தவர்கள் இதிலும் நடித்துள்ளனர். எஸ்.லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாய் கோகுல் ராம்நாத் இயக்கி உள்ளார். வன்ங்ஸ் விஷன் சார்வில் எச்.முரளி தயாரித்துள்ளார்.
இதில் சந்தானம் மனோதத்துவ நிபுணராக நடித்துள்ளார். காதலால் ஒரு குடும்பத்திற்குள் ஏற்படும் பிரச்சினையை அவர் எப்படி தீர்த்து வைக்கிறார் என்கிற கதை. படத்தின் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் வெளியிடுவதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள் தற்போத ஆயுதபூஜை விஜயதசமி, சரஸ்வதிபூஜை என வரிசையாக விடுமுறை வருவதால் வருகிற 21ந் தேதி (புதன் கிழமை) வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.