‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
S/O சத்யமூர்த்தி படத்திற்கு பின்னர் டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் இயக்குனர் பொய்யப்படி ஸ்ரீனு இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். சரைனொடு என பெயரிடப்படுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். இப்படத்தில் நடிகைகள் ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் கேத்ரின் தெரஸா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கும் கேத்ரின் தெரஸா ஏற்றுள்ள கதாபாத்திரம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. தமிழில் வெளிவந்த மெட்ராஸ் படத்தின் வாயிலாக அறியப்படும் நடிகையான கேத்ரின் தெரஸா, சரைனொடு படத்தில் எம்.எல்.ஏவாக நடிக்கின்றராம். இப்படம் தவிர தமிழில் கணிதன், வீர தீர சூரன், நடிகர் சிம்புவுடன் கான் போன்ற படங்களில் கேத்ரின் நடித்து வருகின்றார்.