டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த சில மாதங்களாகவே முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது என்கிற சேதி அறிந்தாலே, சிறிய நடிகர்களின் படங்கள் அவர்கள் படங்களுடன் மோதி வெற்றி பெற முடியாது என்று தாங்களாகவே பின்வாங்கிக்கொண்டிருந்தன. ஆனால், அப்படி பெரிய அளவில் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சில பெரிய ஹீரோக்களின் படங்கள் எதிர்பார்த்தபடி ஓடாமல் தோல்வியையே தழுவி வந்தன. மாறாக, சிறிய படங்களே வெற்றியை பெற்றன. அதனால் இப்போது சரியான தியேட்டர் கிடைத்தால் போதும் யார் படத்தையும் எப்போது வேண்டுமானாலும் ரிலீஸ் செய்யலாம் என்கிற தைரியம் அனைவருக்குமே ஏற்பட்டு விட்டது.
இதன்காரணமாக இப்போது பெரிய நடிகர்களுக்காக சிறிய நடிகர்கள் பயப்படும் நிலை மாறி வருகிறது. படம் நன்றாக இருந்தால் யார் நடித்தாலும் ரசிப்பார்கள் என்று அவர்களும் போட்டிக்கோதாவில் வரிந்து கட்டுகின்றனர். அந்த வகையில், இதுவரை தீபாவளிக்கு கமலின் தூங்காவனம், அஜீத்தின் வேதாளம் படங்கள்தான் ரிலீஸ் என்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது பாபி சிம்ஹாவின் கோ-2, கலையரசன் நடித்துள்ள டார்லிங்-2 ஆகிய படங்களும் தீபாவளி ரேஸில் களம் இறங்குகின்றன. இவர்கள் மட்டுமின்றி இன்னும் சில படங்களும் கடைசி நேரத்தில் தீபாவளி போட்டியில் கலந்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.