இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழில் ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் அறிமுகமானவர் அசின். கேரளத்து பெண்குட்டியான இவர் குறுகிய காலத்தில் தமிழில் முன்னணி நடிகையாகி விட்டார். ஆனால் நயன்தாரா மாதிரி நீடித்து நிற்க வேண்டியவர், கஜினி இந்தி ரீமேக் படம் மூலம் இந்திக்கு சென்றவர் பின்னர் முழுநேர இந்தி நடிகையாகி விட்டார். ஆனால் அபிசேக் பச்சனுடன் நடித்த ஆல் இஸ் வெல் படத்திற்கு பிறகு அவருக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை.
இந்த நிலையில், மைக்ரோ மேக்ஸ் மொபைல் நிறுவனர் ராகுல் சர்மாவுடன் ஏற்கனவே தனக்கு ஏற்பட்டிருந்த காதலை மூடி மறைத்து வைத்திருந்த அசின், பின்னர் தானே வெளியில் கசிய விட்டார். அதையடுத்து இரு குடும்பத்தாரும் பேசி முடிவெடுத்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். வருகிற டிசம்பரில் அவர்கள் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், தனது வருங்கால கணவர் உலக அளவிலான பிஸ்னஸ் நடத்தி வருபவர் என்பதால், திருமணத்திற்கு முன்பே அவருடன் உலகத்தை சுற்றிவர முடிவெடுத்துள்ள அசின், திருமணத்திற்கு தேவையான நகை, டிரஸ் மற்றும் அலங்கார பொருட்களை வாங்கிவர அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன் என பல நாடுகளுக்கு பறந்துள்ளார். அவருடன் காதலர் ராகுல் சர்மாவும் கைகோர்த்து சென்றிருக்கிறாராம்.