அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினர் செய்யும் பிரச்சாரத்தினால் நடிகர்களுக்கே அவமானம் ஏற்பட்டுவிட்டதாக நேற்று நடைபெற்ற பிரஸ்மீட்டில் பொங்கினார் சிம்பு. விஷாலை கடுமையான வார்த்தைகளாலும், தரக்குறைவாகவும் பேசிய சிம்பு, விஷால் அணியில் உள்ள பிற நடிகர்களையும் விட்டு வைக்கவில்லை. தன்னுடைய பேச்சின் நடுவில் போகிறபோக்கில் தனுஷையும் கோர்த்துவிட்டார்.
இது தற்செயலாக நடைபெற்றதா.. அல்லது திட்டமிட்டே தனுஷை சிக்க வைத்தாரா என்று தெரியவில்லை. என் நண்பர் தனுஷ் கூட இது பற்றி என்னிடம் வருத்தப்பட்டார். விஷால் இப்படி எல்லாம் செய்வது மிகவும் அவமானமாக இருப்பதாக தனுஷ் என்னிடம் சொன்னார். இதை நாம் எப்படியாவது தடுக்க வேண்டும்... தட்டிக்கேட்க வேண்டும் என்று சொன்னார் என்று விஷாலைப் பற்றி தனுஷ் வருத்தப்பட்டுப் பேசியதாக சிம்பு சொல்லிக் கொண்டே போனார்.
சிம்பு சொல்வதுபோல் விஷால் பற்றி தனுஷ் கருத்து தெரிவித்தாரா? அல்லது தனக்கு பலம் சேர்ப்பதற்காக தனுஷை உள்ளே கொண்டு வருகிறாரா என்று தெரியவில்லை. உண்மை என்ன என்பது சிம்புவுக்கும்.. தனுஷுக்கும்தான் வெளிச்சம்.