'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
உலக அழகியாக தேர்வாகி விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை. ஆனால் இந்தியில் பெரிய ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ஹாலிவுட்டில் தயாராகும் குவாண்டிகோ -என்ற மெகா சீரியலில் பிரியங்கா சோப்ரா லீடு ரோலில் நடித்து வருகிறார். விரைவில் ஹாலிவுட்டில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலை இந்தியாவிலும் ஒளிபரப்பு செய்கிறார்களாம்.
மேலும், சீரியல்களைப் பொறுத்தவரை குடும்பப்பாங்காகத்தான் நடிகைகள் நடிப்பார்கள். ஆனால் இந்த குவாண்டிகோ சீரியலில் முதல் காட்சியிலேயே பிகினி உடையணிந்து நடித்துள்ளாராம் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் நடிகைகள் சீரியல்களில் அந்த மாதிரி உடையணிந்து நடிப்பதற்கு எதிர்ப்புகள் இருக்காது என்றபோதும், இந்தியாவில் ஒளிபரப்பாகும்போது அதற்கு எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிகிறது. இருப்பினும் எந்த எதிர்ப்புகளையும் சந்திக்க தயாராகி விட்டாராம் பிரியங்கா சோப்ரா.