ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
தென்னிந்திய நடிகையா மாதுரிமா, 'இஷ்க் நே கிரேசி கியா ரே' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் 30ம் தேதி வெளியாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் மாதுரிமா. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், சல்மான் கானும், கரீனாவும் தான் எனக்கு பிடித்த நடிகர்கள். அவர்களை நான் பின்தொடருகிறேன். பஜ்ரங்கி பைஜான் படத்தை பார்த்துவிட்டு சல்மான் மீது ஒருவிதமான ஈர்ப்பு வந்துவிட்டது. சொல்லப்போனால் அவர் மீது காதலில் விழுந்துவிட்டேன். பஜ்ரங்கி படத்தில் சல்மானின் நடிப்பை பார்த்துவிட்டு கலங்கிவிட்டேன். அந்தவகையில் என்னை அழ வைத்துவிட்டார் சல்மான். சல்மான் கான் உடன் நடிக்கும் ஆசை இருக்கிறது. கண்டிப்பாக ஒருநாள் அது நடக்கும் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார்.