'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற 'தனி ஒருவன்' படத்தின் தெலுங்க, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளின் ரீமேக் உரிமைகள் விற்கப்பட்டு விட்டதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரீமேக் உரிமைகளில் மட்டுமே தயாரிப்பாளருக்கு சில பல கோடிகள் லாபமாகக் கிடைத்துள்ளன. தெலுங்கு ரீமேக் உரிமையை விட ஹிந்தி ரீமேக் உரிமை மிகப் பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். சல்மான் கானின் சொந்தத் தயாரிப்பு நிறுவனம்தான் படத்தை வாங்கியுள்ளதாம். இது சம்பந்தமாக கடந்த இரண்டு நாட்களாக ஹிந்தி மீடியாக்களில் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
ஆனால், படத்தில் சல்மானே நடிக்கப் போகிறாரா அல்லது வேறு யாராவது ஒரு முன்னணி நடிகர் நடிப்பாரா என்பதைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லையாம். இப்போதைக்கு படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து விவாதித்து வருகிறார்களாம். அனேகமாக தமிழ்ப் படத்தை இயக்கிய ராஜா இயக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள். ஹிந்தியில் ஏற்கெனவே பிரபலமான இயக்குனர் இயக்கினால் நன்றாக இருக்கும் என சல்மான் வட்டாரம் நினைக்கிறதாம். அவருடைய லிஸ்ட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் கூட இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அடுத்த வருடம்தான் படத்தை ஆரம்பிக்க உள்ளார்களாம், அதற்குள் படத்தின் மற்ற விவரங்களை முடிவு செய்துவிடுவார்கள் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.