திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் போட்டியிடுகிறார்கள்.
விஷால் அணியில் சோனியாவும், பிரேமும் போட்டியிடுகிறார்கள். இருவரும் சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். சரத்குமார் அணியில் சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவர் நளினி, சின்ன பாப்பா பெரிய பாப்பா புகழ் நிரோஷா, பசி சத்யா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். குயிலி, ஆர்த்தி, பாத்திமா பாபு, குண்டு கல்யாணம் ஆகியோர் சரத்குமார் அணியில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் கட்சியினர் யாரும் போட்டியிடக்கூடாது என்று அதிமுக தெரிவித்து விட்டதால் இவர்கள் யாரும் போட்டியிடவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்குமார் அணியில் சரத்குமார், ராதாரவி, ராம்கி, நிரோஷா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இதில் ராதாரவியும், நிரோஷாவும் சின்னத்தரையில் நடிக்கிறார்கள். ராம்கி சின்னத்திரை தயாரிப்பாளராக இருக்கிறார்.