விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
சில மாதங்களுக்கு முன்னர் கேத்தன் மேத்தா இயக்கும், ராணி லட்சுமி பாய் வாழ்க்கை வரலாற்று படத்தில், பாலிவுட்டின் குயின் கங்கனா ரணாவத் நடிக்கப்போவதாக செய்திகள் வந்தது. படமும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது அந்தப்படத்தை கிடப்பில் போட்டுள்ளனர். சமீபத்தில் கங்கனா நடிப்பில் வெளிவந்த கட்டி பட்டி படம் தோல்வியை தழுவிய போதும் தனது சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார். அதுவும் இந்தப்படம் வரலாற்று படம், நீண்டநாட்கள் நடிக்க வேண்டும் என்பதால் சம்பளத்தை அதிகமாக கேட்டிருக்கிறார். கட்டி பட்டி படத்தின் தோல்விக்கு முன்னர் கங்கனா கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாராக இருந்த படக்குழு இப்போது அந்தப்படம் தோல்வியை தழுவியதால் கங்கனாவிடம் சம்பளத்தை குறைக்க சொல்லி கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டாராம். இதனால் படம் தற்போதைக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.