ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சல்மான் கான் நடிப்பில் வெளியாக உள்ள படம் பியார் ரத்தன் தான் பயோ. அக்டோபர் 1 ம் தேதி வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பரிமாறி இருந்த ஷாருக்கான், சல்மான் கானுக்கும் பியார் ரத்தன் தான் பயோ பட குழுவினருக்கும் படம் வெற்றி பெற வாழ்த்து கூறி இருந்தார். சல்மான்கானின் படம் பற்றிய ஷாருக்கான் டுவிட்டரில் கருத்து தெரிவிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் பட வெளியாவதற்கு முன் அந்த படத்தின் டீசர் போஸ்டரை தனது டுவிட்டரில் ஷாருக்கான் பதிவிட்டிருந்தார். தற்போது ஷாருக்கானின் வாழ்த்தை பெற்றுள்ள பியார் ரத்தன் தான் பயோ படம் நவம்பர் 12ம் தேதி ரிலீசாக உள்ளது.