ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இமய இயக்குனரின் வாரிசு, ரெட் ரோஸ் படத்தை ரீமேக் செய்து தந்தையின் பாதைய தொடரப்போகிறேன் என்று அந்த படத்தை தொடங்கினார். ஆனால் படம் பூஜையோடு நின்றுபோனது. அதனால் மீண்டும் நடிப்பதற்கு சில கம்பெனி கதவுகளை தட்டினார்.
அதற்கு பலனாக இரண்டொரு படங்கள் கிடைத்தன. அதில் ஒன்று பேய் படம். ஆனால் கோலிவுட்டிலுள்ள ஒட்டு மொத்த பேய் படங்களையும் வாங்கி வெளியிடும் அந்த பிலிம்ஸ் நிறுவனம் வாரிசு நடிகரின் படத்தைப்பார்த்து விட்டு வாங்க மறுத்து விட்டதாம்.
இதனால் ஊர்ல உள்ள பேய் படங்களையெல்லாம் வாங்குபவர்கள்கூட என் படத்தை வாங்க மறுக்கிறார்களே. நான் என்ன அவ்ளோ மோசமாவா நடிச்சிருக்கேன் என்று புலம்பிக்கொண்டிருக்கிறாராம்.