ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவிற்குள் நடிக்க வரும் அனைத்து நடிகைகளுக்குமே ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்கிற ஆசை இருந்து வருகிறது. அந்த வகையில், முன்பெல்லாம் ரஜினியுடன் டூயட் பாட வேண்டும் என்று நடிகைகளுக்கிடையே இருந்து வந்த ஆசை இப்போது மகளாக நடித்தாலும் போதும் என்கிற அளவுக்கு மாறியிருக்கிறது.
அந்த வகையில், ரஜினியுடன் நயன்தாரா மட்டுமே மூன்று படங்களில் நடித்துள்ளார். மற்றபடி அனுஷ்கா லிங்காவில் நடித்தார். அதையடுத்து தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகளுக்கு ரஜினிபட வாய்ப்பு இன்னும் குதிரைக்கொம்பாகவே இருந்து வருகிறது. இந்த விசயத்தில் த்ரிஷா கமலுடன் இரண்டு படங்களில் நடித்து விட்டபோதும் ரஜினி பட வாய்ப்பு வரவில்லையே என்று ரொம்ப பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து ஹன்சிகாவுக்கு ரஜினியுடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும் என்ற ஆசை அளவுக்கதிகமாக உள்ளதாம். மேலும், ரஜினியின் தீவிரமான ரசிகை நான் என்று சொல்லிக்கொள்ளும் அவர், அடுத்தடுத்து ரஜினி நடிக்கயிருக்கும் படங்களில் தான் நினைப்பது போன்று கதாநாயகி வாய்ப்புக்கு முயற்சி எடுப்பாராம். ஒருவேளை கிடைக்காதபட்சத்தில் கேரக்டர் ரோல் கிடைத்தாலும் நடிப்பதற்கு தயாராகி விட்டாராம் ஹன்சிகா. கோலிவுட்டில் தனது மார்க்கெட் கெட்டியாக இருக்கும்போதுதான் இதெல்லாமே சாத்தியமாகும் என்பதால் திரைக்குப்பின்னால் ஹன்சிகாவின் ரஜினிபட முயற்சி தீவிரமடைந்திருப்பதாக சொல்கிறார்கள்.