தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய், அஜித் படங்கள் பற்றிய செய்திகள், தகவல்கள் ஆகியவைதான் இந்தக் காலத்தில் சமூக வலைத்தளங்களில் அவர்களது ரசிகர்களால் அதிகமாக போட்டி போட்டு பேசப்படுவது வழக்கம். ஆனால், நேற்று ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அதிகமாகப் பேசப்பட்டார்கள். அதே சமயம், எதிர்பாராமல் அல்லது திட்டமிட்டே வெளியிடப்பட்ட 'கபாலி' படத்தின் முதல் பார்வை 'தூங்காவனம்' டிரைலரைப் பற்றிய பேச்சை ஒரேயடியாக அமுக்கி விட்டது.
நேற்று 'தூங்காவனம்' டிரைலரை வெளியிடப் போவதோக சில நாட்களுக்கு முன்பே கமல்ஹாசன் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை சென்னையில் படத்தில் நடித்துள்ள பெரும்பாலான நட்சத்திரங்களுடன், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து 'தூங்காவனம்' டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டார். அடுத்து ஒரு சில மணி நேரங்கள் வரைதான் 'தூங்காவனம்' டிரைலரைப் பற்றிய பேச்சு பரபரப்பாக இருந்தது.
ஆனால், மாலை சமூக வலைத்தளங்களில் திடீரென 'கபாலி' படத்தின் முதல் பார்வை பரவியது. அதன் பின் 'தூங்காவனம்' டிரைலரைப் பற்றி யாருமே கண்டு கொள்ளவில்லை. சமூக வலைத்தளங்களிலும் ரஜினிகாந்த் பற்றியும், 'கபாலி' பற்றியும்தான் பேச்சு அதிகமாகப் பரவியது. ரஜினிகாந்த்தும் அவருடைய டிவிட்டரில் 'கபாலி' படத்தின் முதல் பார்வையை வெளியிட 'ஃபேஸ்புக், டிவிட்டர்' அனைத்திலும் 'கபாலி' சம்பந்தப்பட்ட வார்த்தைகளே டிரெண்டிங் ஆகின.
“சூப்பர் ஸ்டார், கபாலி, ரஜினிகாந்த், பீம்ஜி (பா.ரஞ்சித்தின் டிவிட்டர் கணக்கு), தலைவர்,” ஆகியவை டிரெண்டிங்கில் இருந்தன. அது மட்டுமல்ல 'கபாலி'யின் முதல் பார்வையைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்த சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சிலரும் டிரெண்டிங்கில் இடம் பெற்றார்கள்.
'தூங்காவனம்' டிரைலர் இரண்டு மணி நேரம் மட்டுமே டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்க, அதன் பின் பல மணி நேரங்களுக்கு 'கபாலி'தான் முதலிடத்தில் இருந்தது. 'தூங்காவனம்' டிரைலருக்கு ஏட்டிக்குப் போட்டியாக வேண்டுமென்றே 'கபாலி' படத்தின் முதல் பார்வை நேற்று மாலையே வெளியிடப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.