தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'பாண்டிய நாடு', படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் இயக்குனர் சுசீந்திரன், விஷால் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் 'பாயும் புலி'. கடைசி கட்டத்தில் இந்தப் படம் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகுமா ஆகாதா என்ற பரபரப்புடனே நேற்று படம் வெளியானது. படம் பற்றி இருவேறு விதமான கருத்துகள் தற்போது வெளிவந்துள்ளன. ஒரு சிலர் படம் பரவாயில்லை ரகம் என்கிறார்கள், வேறு சிலரோ 'பாண்டிய நாடு' படம் அளவிற்கு இல்லை என்கிறார்கள்.
அதற்குக் காரணம் படத்தின் திரைக்கதை. எந்த வித விறுவிறுப்பும், பரபரப்பும் இல்லாமல் படம் நகர்வதே அதற்குக் காரணம். மேலும் கடந்த வாரம்தான் ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமான 'தனி ஒருவன்' படத்தை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். அந்தப் படம் ஆக்ஷன் படங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அந்த தாக்கத்தில்தான் 'பாயும் புலி' படம் சிக்கிக் கொண்டு விட்டது. மேலும், சொந்த அண்ணன்தான் படத்தின் நாயகனான தம்பிக்கு எதிரி என்பதால் அதில் பெரிய சுவாரசியம் எதுவும் இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் வியாபார ரீதியாக படம் தப்பித்து விடும் என்கிறார்கள்.
அசோக் செல்வன், பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் 'சவாலே சமாளி'. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கும் படம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அசோக் செல்வன், தனி நாயகனாக நடித்து ஒரு படத்தைக் காப்பாற்றும் அளவிற்கு வளர்ந்துவிட்டார் என்றெல்லாம் சொல்ல முடியாது. படத்தைப் பற்றிய முந்தைய விளம்பரங்கள் எதுவும் பெரிதாக இல்லாததால் இப்படி ஒரு படம் வெளிவந்திருக்கிறது என்பது கூட பலரைச் சென்று சேரவில்லை.
நடன இயக்குனராக ஸ்ரீதர் நாயகனாக நடித்திருக்கும் படம். குடிப்பழக்கத்திற்கு எதிரான படம் என்ற சிறப்பம்சம் மட்டுமே இந்தப் படத்திற்கு உண்டு. மற்றபடி அமெச்சூரான காட்சிகள், படமாக்கம் ஆகியவை படத்திற்கு மைனஸ் பாயிண்டாக அமைந்துள்ளது.
இந்த வாரம் வெளிவந்த படங்களில் நிறைவைத் தரும் படம் என்று எதையும் சொல்ல முடியாது.