ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் டி.வி. ஆண்டுதோறும் தங்கள் சேனலின் திறமையான கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இரண்டாம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சிறந்த சீரியல் நடிகர், நடிகைகள், தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது வழங்கும் விழாவின் விளம்பர பாடல் கடந்த 31ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் 19ந் தேதி சனிக்கிழமை ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியல் விஜய் டி.வி.நட்சத்திரங்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது. திரைப்பட விருது வழங்கும் விழாக்களுக்கு நிகராக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.