ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் வெளியான படங்களில் மோகன்ராஜா இயக்கத்தில், ஜெயம்ரவி நடித்த தனி ஒருவன் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்துள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும், மற்றவர்களைவிட படத்தில் ஸ்கோர் பண்ணியது அரவிந்த்சாமிதான். அவர் நடித்தது வில்லன் வேடம் என்றாலும், அரவிந்த்சாமியின் இமேஜை மனதில் வைத்து கௌரவமான வில்லனாக அந்த வில்லன் வேடத்தைப் படைத்திருந்தார் இயக்குநர் மோகன்ராஜா.
தனி ஒருவன் படத்தை ஹிந்தியில் ரீமேக் பண்ணும் எண்ணத்தில் அப்படத்தை அண்மையில் பார்த்துள்ளனர் சல்மான்கானின் பட நிறுவனத்தை சேர்ந்தவர்கள். எனவே சல்மான்கான் நடிக்க தனி ஒருவன் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி தனி ஒருவன் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டால் அதை மோகன்ராஜாவே இயக்க ஆர்வமாக இருக்கிறார். அதுமட்டுமல்ல வில்லனாகவும் அரவிந்த்சாமியையே நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் ஏற்கனவே இரண்டு ஹிந்திப்படங்களில் நடித்து வருகிறார் அரவிந்த்சாமி. எனவே தனி ஒருவன் ஹிந்தி ரீமேக்கில் அரவிந்த்சாமி நடிப்பாரா என்று தெரியவில்லை.