இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரோமியோ ஜூலியட், தனிஒருவன் வெற்றியில் மகிழ்ந்து கொண்டிருக்கும் ஜெயம்ரவி அடுத்து மிருதன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.
நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்துயானை , சிந்து சமவெளி படங்களைத் தயாரித்த எஸ். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம், தற்போது அதர்வா நடிக்கும் ஈட்டி என்ற படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து மிருதன் என்ற படத்தை தயாரிக்கிறது. நாணயம், நாய்கள் ஜாக்கிரதை படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். ஜெயம்ரவி - லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.
டி.இமான் இசை அமைக்கிறார் மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார் . எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். முதல் கட்டப் படப்பிடிப்புகள் சத்தமே இல்லாமல் ஊட்டியில் 30 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு இம்மாதம் 18 ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது.