இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் தனது 44வது பிறந்தநாளை கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி கொண்டாடினார். பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் சர்தார் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசரில் ஸ்டைலாக கண்ணாடி அணிந்து, குதிரையுடன் நடந்து வரும் பவன் கல்யாண் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அதற்கேற்றார் போல் அமைந்துள்ள பின்னணி இசையும் பவன் கல்யாணியின் ஸ்டைலை அதிகரிக்க செய்துள்ளது.. டீசர் வெளியிடப்பட்ட ஒரே நாளில் அதனை 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். சர்தார் டீசரை ஒரே நாளில் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் பார்த்தது டோலிவுட்டில் புதிய சாதனையாக உருவாகியுள்ளது. பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிக்கும் படம் என்பதால் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இயக்குநர் பாபி இயக்ககத்தில் உருவாகும் இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுவிட்டன.நடிகை காஜல் அகர்வால் இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார்.