ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மின்னலே, சாமி, காக்க காக்க, அந்நியன், கஜினி, ஏழாம் அறிவு, வாரணம் ஆயிரம், ஒரு கல் ஒரு கண்ணாடி, துப்பாக்கி, அனேகன் என பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். அருமையான மெலோடி பாடல்களை கொடுப்பதே அவரது பாணியாக இருந்தபோதும், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வேணாம் மச்சான் வேணாம், என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு..., அனேகனில் டங்காமாரி ஊதாரி போன்ற குத்துப்பாடல்களுக்கும் இசையமைத்து மேல்மட்ட இசையமைப்பாளரான ஹாரிஜ் ஜெயராஜ் கீழ்மட்டத்தையும் இந்த பாடல்கள் மூலம் ரவுண்டு கட்டியடித்தார்.
ஆனபோதும், கெத்து படம் மட்டுமே அவர் கைவசம் இருந்தது. இந்த நிலையில், தற்போது ஜீவா நடிக்கும் போக்கிரி ராஜா படத்துக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறாராம். இதற்கு முன்பு ஜீவா நடித்த கோ, என்றென்றும் புன்னகை, யான் ஆகிய படங்களுக்கும் அவர்தான் இசையமைத்திருக்கிறார். அந்த படங்களில் அவரது இசை ஜீவாவை வெகுவாக கவர்ந்து விட்டதால் இந்த படத்திற்கும் அவரே இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாராம். மேலும், இந்த படத்தில் மீண்டும் ஒரு டங்காமாரியை கொடுக்க ஹாரிஸ் ஜெயராஜ் தயாராகிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.