மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
நகுல், அட்டகத்தி தினேஷ் நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் அறிமுகமானவர் பெங்காலி நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதன்பிறகு விஷாலின் பாயும்புலி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்துள்ள இவர், தற்போது அருள்நிதி நடிக்கயிருக்கும் மெமரிஸ் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஈரம் அறிவழகன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 23-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது.
மேலும், இந்த படத்தில் முதலில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு படங்களில் நடித்த மோனல் கஜாரைத்தான் பேசினர். ஆனால், அவர் தெலுங்கு மார்க்கெட்டை முன்வைத்து எக்குத்தப்பாக சம்பளம் கேட்டதால், அவரை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா தத்தாவை புக் பண்ணியிருக்கிறார்களாம்.
அதோடு, இதற்கு முந்தைய படங்களைவிட இந்த படத்தில் ஐஸ்வர்யாதத்தாவுக்கு அழுத்தமான வேடமாம். குறிப்பாக, குடிகாரனாக நடித்திருக்கும் அருள்நிதியை தனது அன்பாலே திருத்தும் கதாபாத்திரமாம் அவருக்கு. ஆக, இந்த படமே தமிழில் எனக்கு ஒரு நல்ல இடத்தை பிடித்துத்தரும் என்று எதிர்பார்க்கும் ஐஸ்வர்யா தத்தா, அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகளும் தன்னை நெருங்கிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்.