பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
'தூங்காவனம்' படத்தின் முதல் பார்வையை வெளியிடப்பட்ட போது கமல்ஹாசன், முகம் தெரியாத த்ரிஷாவுக்கு (?) அழுத்தமான முத்தம் கொடுப்பது போல போஸ்டர்கள் வெளியாகின. கமல்ஹாசன் படம்தானே அப்படி ஒன்று இருந்தால் ஆச்சரியமில்லை என்று பலரும் அதைப் பற்றிப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகின்றன. ஆனால், படத்தில் முத்தக் காட்சி இருக்கிறதா இல்லையா என்று அதைப் பற்றி யாருமே பேசாமல் இருக்கிறார்கள்.
படத்தில் த்ரிஷாதான் நாயகி, ஆனால் அவர் கமல்ஹாசனுக்கு ஜோடி இல்லை என்றும், கமலுக்கு ஜோடியாக ஆஷா சரத் தான் நடிக்கிறார் என்றும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியென்றால் த்ரிஷாவுக்கு கமல் முத்தம் கொடுப்பது போல் காட்சி எப்படி ? என சிலர் குழம்பிப் போயிருக்கிறார்கள். கமல்ஹாசன் படத்தில் ஒரு காவல் துறை அதிகாரியாக வருகிறாராம். அவருடைய டீமில் த்ரிஷாவும் ஒரு அதிகாரியாம். கடத்தி வைக்கப்பட்டுள்ள தன் மகனைக் காப்பாற்ற கமல்ஹாசன் அன்ட் கோ களத்தில் குதிப்பதுதான் படத்தின் கதையாம்.
ஏற்கெனவே, முதல் பார்வையில் தன்னுடைய முகத்தைக் காட்டவில்லை என த்ரிஷா கமலிடமே குறைபட்டுக் கொண்டார். இப்போது முதல் பார்வையில் உள்ளது போல முத்தக் காட்சி இல்லையென்றால் ரசிகர்கள் வருத்தப்பட மாட்டார்களா ?.