திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
அட.. சூப்பர்ஸ்டார் படங்கள் மலேசியாவில் வெளியாவது ஒரு செய்தியா என நீங்கள் நினைத்தால், நிச்சயம் இதுதான் செய்தி.. ஆவரேஜுக்கும் கொஞ்சம் அதிகப்படியான வெற்றி தான் என்றாலும் கூட, ஓணம் படங்களிலேயே அதிக வசூலை அள்ளிவரும் மோகன்லாலின் 'லோஹம்' படம் இப்போது மலேசியாவிலும் திரையிட இருப்பது ஆச்சர்யமான விஷயம் தான். காரணம் மலேசியாவை பொறுத்தவரை மலையாளப்படங்களில் ஹிட் என தெரிந்தால் மட்டுமே, அதை இரண்டு வாரங்கள் கழித்து அங்கே ரிலீஸ் செய்வார்கள். ஆவரேஜ் படங்களுக்கு அங்கே இடமில்லை..
இதற்குமுன் மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' படம் மலேசியாவில் வெளியாகி வரவேற்புடன் வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்தது. ஆனால் அதன்பிறகு மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் ஆறு படங்கள் (தமிழில் 'ஜில்லா' தவிர) ஆவரேஜ் ரேட்டிங் என்பதால் மலேசியாவில் திரையிடப்படவில்லை.. அதனால் தான் இப்போது 'லோஹம்' படம் அங்கே ரிலீஸாக இருப்பது ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது.. வரும் வாரத்திலிருந்து அங்கேயுள்ள பெடரல் தியேட்டரில் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இரண்டு காட்சிகள் மட்டும் 'லோஹம்' திரையிடப்பட இருக்கிறது.