மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் அடுத்து இயக்கும் படத்திற்கு பெயர் வைக்கவில்லை. தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க வித்யாபாலனை அணுகினார்கள். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இதுகுறித்து இயக்குனர் துரை.செந்தில்குமார் கூறும்போது: கதைக்கு வித்யாபாலன் பொருத்தமாக இருப்பதால் அவரை நடிக்க கேட்டு அணுகியது உண்மை. ஆனால் நாங்கள் கேட்ட தேதியில் அவர் கால்ஷீட் ஒதுக்கித் தரவில்லை. அதனால் வேறொரு ஹீரோயினைத் தேடிக் கொண்டிருக்கிறோம். என்றார்.
எந்த விதத்திலும் தனஷ் தனக்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்று வித்யாபாலன் கருதுவதாகவும், ஒரு காலத்தில் தன்னை புறக்கணித்த தமிழ் சினிமாவில் நடிக்க வித்யாபாலன் விரும்பவில்லை என்றும் அவருக்கு நெருக்கமான வட்டராங்கள் தெரிவிக்கின்றது.