வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
குதிரை பந்தயத்தை மையப்படுத்தி தயாராகி வரும் என்னோடு விளையாடு படத்தில் தற்போது நடித்து வருகிறார் பரத். இந்த படத்தில் அவரது நண்பராக நடிக்க ஒரு நடிகர் தேவைப்பட்டபோது சிலரை பரிசீலனை செய்து பின்னர் மதயானைக்கூட்டம் கதிரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதில் கதிருக்கு நண்பர் வேடம் என்றாலும், இன்னொரு ஹீரோ போன்ற கதாபாத்திரமாம். பல காட்சிகளில் அவரது தனித்திறமை வெளிப்படும் வகையில் நடித்துள்ளாராம்.அதனால் பரத்துடன் நடிக்கும் என்னோடு விளையாடு படத்தில் என் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்கிறார் கதிர்.
அதோடு, தற்போது நான் நாயகனாக நடித்துள்ள கிருமி படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தரும். காரணம், அந்த படம் சமுதாயத்துக்கு தேவையான கதையில் உருவாகியிருக்கிறது. சமுதாயத்தின் களை எடுக்கும் கதை என்பதால் அதில் நடித்திருக்கும் எனக்கும் நல்ல பெயர் கிடைக்கும். ஆக, இந்த படங்களுக்குப்பிறகு கோலிவுட்டில் நானும் கவனிக்கப்படும் நடிகராகி விடுவேன் என்கிறார் கதிர்.