ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இதுவரை தளபதி நடிகருக்கு அந்த தல நடிகர்தான் போட்டியாக இருப்பதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அவர்கள் இருவரும் அவ்வப்போது கைகுலுக்கி கொள்வதால் இப்போது அந்த மாயை மறைந்து விட்டது.
ஆனால் சமீபகாலமாக நடிகர் சங்க தலைவராக போட்டியிடப்போவதாக சொல்லி அதிலிருந்து விலகிய அந்த புரட்சி தளபதி, நலத்திட்ட உதவிகளை அடுக்கடுக்காக செய்து பப்ளிசிட்டி தேடிக்கொண்டு வருவதோடு, தளபதி நடிகர் என்னென்ன செய்து வருகிறாரோ அதை அப்படியே தானும் பின்பற்றி வருகிறார். இந்த செயல் தளபதியை ரொம்பவே சூடேற்றி விட்டுள்ளதாம்.
ஆனபோதும், இப்போது அவரைப்பற்றி வாய் திறந்தால் அதுவே அவரை பெரிய ஆளாக்கிவிடும். இந்த மாதிரி நடிகர்களெல்லாம் ஆடிக்காத்து மாதிரி வருவார்கள் போவார்கள். இதற்கெல்லாம் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று சொல்லி அவரை அமைதிப்படுத்தி வைத்திருக்கிறார்களாம்.