பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்துள்ள தனியொருவன் படம் நேர்மறையான விமர்சனங்களுடன் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. நடிகை நயன்தாரா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி வில்லனாக நடித்து பாராட்டுக்களை தட்டி சென்றுள்ளார். இதுநாள் வரை தெலுங்கு படங்களை தமிழ் ரீமேக் செய்து வந்த இயக்குநர் ராஜா முதன்முறையாக சுய திரைக்கதையுடன் இயக்கிய தனியொருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு பலத்த போட்டி நிலவுகின்றதாம். டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான பிவிபி சினிமா, கீதா ஆர்ட்ஸ்,சுரேஷ் புரொடக்ஷன்,சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற பல நிறுவனங்கள் தனியொருவன் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. விரைவில் தனியொருவன் படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது.