ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குழந்தை நட்சத்திரமாக 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரன், ஹீரோவாக இதுவரை 4 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் நடித்த விழா படம் பேசப்பட்டாலும் வெற்றிபெறவில்லை. தற்போது மகேந்திரன், ''பக்கம் நம்பர் 143'' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரேரனா கண்ணா என்ற புதுமுகம் நடிக்கிறார். கர்ணா ஒளிப்பதிவு செய்கிறார், மதுக்கர் இசை அமைக்கிறார். கே.ஜெகன் இயக்குகிறார்.
"உலகம் எவ்வளவு மாறினாலும் சிலரின் குணங்கள் மட்டும் மாறுவதே இல்லை. அப்படி மாறாத கொடூர குணம் கொண்ட ஒருவனை ஒரு பெண் எப்படி மாற்றுகிறாள் என்பதுதான் கதை. காமெடி ரொமாண்டிக் கதை. படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு முடிந்து விட்டது. மொத்தம் 5 பாடல்கள். சென்னை ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது" என்கிறார் இயக்குனர் கே.ஜெகன்.