ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜான் ஆபிரஹாம், நானா படேக்கர், அனில் கபூர், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் வெல்கம் பேக். இப்படம் வருகிற செப்., 4ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இப்படம் பற்றி ஜான் ஆபிரஹாம் கூறியிருப்பதாவது... வெல்கம் படம் எங்கு முடிந்ததோ அதே இடத்திலிருந்து தொடங்குகிறது வெல்கம் பேக் படம். இப்படத்தில் உதய் பாயாக நானா படேக்கரும், மஞ்சு பாயாக அனில் கபூரும் நடித்துள்ளனர். நான் அஜூ பாயாக நடித்துள்ளேன். இப்படத்தில் ரத்தக்காட்சிகளோ... இரட்டை அர்த்த வசனங்களோ... ஆபாசமான காட்சிகளோ... எதுவும் கிடையாது. அனைவரும் பார்க்ககூடிய படமாக வெல்கம் பேக் படம் இருக்கும் என்று கூறியுள்ளார்.