ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ், தெலுங்கில் நம்பர் 1 இடத்தை நோக்கி வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்து நடித்த 'ஸ்ரீமந்துடு' மிகப் பெரிய ஹிட்டாகி அங்கு முன்னணி இடத்தைப் பிடித்து விட்டார் ஸ்ருதி. தமிழில் அடுத்து விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ள 'புலி' வெளிவர உள்ளது. அதற்கடுத்து அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ள இன்னும் பெயரிடப்படாத படம் வெளிவர உள்ளது. அதற்கும் அடுத்து மீண்டும் சூர்யாவுடன் 'சிங்கம் 3' படத்தில் ஜோடி சேர உள்ளார். விஜய், அஜித், சூர்யா ஆகியோரது படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளதால் ஸ்ருதிஹாசன் விரைவில் தமிழிலும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடித்து விடுவார்.