ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வாரிசு நடிகர்களில் முன்னணி இடத்துக்கு வராத ஹீரோக்களில் பி.வாசுவின் மகன் ஷக்தியும் ஒருவர். சில வருடங்களுக்கு முன் நம்பர் ஒன் மசாலாப்பட இயக்குநராக இருந்த பி.வாசு தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்ற திட்டத்தில் தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் ஹீரோவாக்கினார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அடுத்து மகேஷ் சரண்யா மற்றும்பலர், நினைத்தாலே இனிக்கும், ஆட்டநாயகன் போன்ற படங்களில் நடித்தார். இந்தப்படங்களும் வணிகஅளவில் வெற்றியை பெறவில்லை. எனவே தனக்கு பிரேக் தரும் படத்துக்காக காத்திருந்தார் ஷக்தி. இந்நிலையில் தற்காப்பு என்ற படம் தேடி வந்ததும் இதுதான் தனக்கான 'டர்னிங் பாயின்ட் பிலிம்' என முடிவு செய்து அப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஷக்தி. அதோடு தன்னுடைய பெயரை சக்திவேல் வாசு என்றும் மாற்றிக் கொண்டிருக்கிறார்.