மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இளம் ஹீரோக்களில் உடம்பை கட்டுக்கோப்பாக சிக்கென வைத்திருப்பவர் ஆர்யா. அதற்கு முக்கிய காரணம் அவரது சைக்கிள் பயிற்சி. தினந்தோறும் அதிகாலை 4 மணி முதல் 7.00 மணி வரை 3 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 100 கி.மீ. சைக்கிளிலேயே பயணம் செய்கிறார் ஆர்யா. தன்னுடைய ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, தன்னுடைய ஃபிட்னஸிற்கும் தினமும் நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டுவதையே முக்கியக் காரணமாக நினைக்கிறார் ஆர்யா. சைக்கிள் ஓட்டுவதை தன்னுடைய ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பும் ஆர்யா இது குறித்து அவர்களை உற்சாகப்படுத்தியும் வருகிறார். சைக்கிள் ஓட்டுபவர்களை ஒருங்கிணைத்து இதற்காக தனியாக பெரிய குரூப் ஒன்றையும் வைத்திருக்கிறார். இந்த குரூப்பில் சேரும் ஆட்களின் எண்ணிக்கை தினமும் அதிகமாகிக் கொண்டே வருகிறதாம். ஆர்யாவை நேரில் பார்த்து அவரிடம் பழகுவதற்காகவே பல ரசிகர்கள் தற்போது புதிய சைக்கிளை வாங்கிக் கொண்டு ஆர்யாவின் குரூப்பில் இணைகின்றனர். அப்படி வருபவர்களை ஆர்யாவும் வரவேற்று அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ஆர்யாவின் இந்த செயல் காரணமாக சுற்றுப்புறச் சூழலுக்கும், ஆரோக்கியத்துக்கும் முக்கியமான உடலமைப்பிற்கும் பேருதவி செய்யும் மிதிவண்டி பயணத்தை, ஆர்யா மூலமாக பல ரசிகர்களும் பின்பற்றி வருவதால் சத்தமில்லாமல் ஒரு 'சைக்கிள் புரட்சி'யே நிகழ்ந்து கொண்டிருக்கிறதாம்.