Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதாநாயகியை இயக்குநர் படுத்திய பாடு!

31 ஆக, 2015 - 15:48 IST
எழுத்தின் அளவு:
Jingin-movie-director-Nandha-Periyasamy

அண்மையில் வெளிவந்த படம் ஜிகினா .இது முகநூல் நட்பைச் சொன்ன படமான இதில் விஜய் வசந்த், சானியா தாரா நடித்திருந்தனர். கதைப்படி விஜய் வசந்தின் கறுப்பு நிற காதலியாக நடித்திருந்தவர் பெயர் ரா.ஸ்ரீதேவி.கதைப்படி அவர்தான் கதைநாயகி.


படத்தில் கறுப்பான ஒருத்தி என்று தெரியாமல், முகநூல் மூலம் நாயகன் காதலிப்பதுதான் கதை. எனவே அந்த சஸ்பென்சைக் காப்பாற்ற படத்தில் அந்த பாத்திரத்தில் நடித்த நடிகையான ரா.ஸ்ரீதேவியை படாதபாடு படுத்தி எடுத்து விட்டாராம் இயக்குநர் ரவிநந்தா பெரியசாமி


படத்தில் நடிப்பது என்று முடிவானபின் அலுவலகம் வரச் சொல்லி யாரிடமும் பேசக்கூடாது, போன் பேசக் கூடாது, புத்தகம் படிக்கக் கூடாது,. ஹெட் போனில் பாட்டு கேட்கக் கூடாது ,யாரிடமும் எதுபற்றியும் கேட்கவோ பேசவோ கூடாது, சிரிக்கக்கூடாது,அப்படிச் செய்தால் அது நடிக்கும் கேரக்டரையே கெடுத்து விடும் என்றிருக்கிறார்.நிமிர்ந்து பார்க்கக் கூடாது கூடியவரை உன் முகம் யாருக்கும் தெரியக் கூடாது என்று கட்டுப்பாடுகள் போட்டாராம் அப்படியே நடிகையும் பலநாள்கள் இருந்தாராம். படப்பிடிப்புக்கு போனபோது கூட அங்கு இந்த ஸ்ரீதேவி ஏற்றிருப்பது படத்தின் கநாநாயகி வேடம் என்பது யாருக்கும் தெரியாதாம். எனவே படக்குழுவினர் இவரை அவமதித்தார்களாம். ஒரு துணை நடிகையைப் போலவே நடத்தினார்களாம் பாவம்!. க்ளைமாக்ஸில் விஜய் வசந்துடன் கொடைக்கானல் மலை உச்சியில் ஏறி நடித்தபோது. டூயட் பாடிய கடைசி நாட்களில்தான் இவரதான் முக்கிய பாத்திரம் என்று தெரிந்ததாம். ஏம்மா.. முன்னமே இதுபற்றி சொல்லக் கூடாதா என்றார்களாம் குழுவினர். படம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிக்கும் ஸ்ரீதேவியை இயக்குநர் அழைக்கவில்லையாம் பத்திரிகையாளர் காட்சிக்குக் கூட அழைக்கவில்லையாம். அந்த அளவுக்கு படத்தின் சஸ்பென்சை இரும்புப் பெட்டிக்குள் வைத்து காப்பாற்றி இருக்கிறார் இயக்குநர் ரவிநந்தா பெரியசாமி .ஜிகினா கதைநாயகியின் கதையைவிட இது பெரிய சோகமாக இருக்கிறதே!.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in