Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மறக்க முடியாத 'மங்காத்தா'

31 ஆக, 2015 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Anniversary-for-Mankatha-movie

'சென்னை 28, சரோஜா, கோவா' ஆகிய படங்களை இயக்கிய வெங்கட் பிரபு, அஜித் நாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார் என்ற செய்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அதைக் கேட்டு திரையுலகத்தினர் மட்டுமல்ல, தமிழ் ரசிகர்கள் கூட ஆச்சரியப்பட்டுத்தான் போனார்கள். விளையாட்டுத்தனமாக படங்களை இயக்கியவர் எப்படி அஜித்தை வைத்து படத்தை இயக்குவார் என கேள்விகள் எழுந்தன. ஆனால் அதற்கு அடுத்த வருடம் 2011ம் ஆண்டு இதே நாளில் 'மங்காத்தா' வெளிவந்து வெங்கட்பிரபுவைப் பற்றிக் கேள்வி எழுப்பியவர்களின் வாயை அடைத்தது. அப்படி ஒரு வெற்றிப் படமாக 'மங்காத்தா' அமைந்தது.


ஒரு நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் அஜித்தின் நடிப்பும், ஸ்டைலிஷான உருவாக்கமும், யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் படத்தை தூக்கி நிறுத்தின. ஒரு விறுவிறுப்பான, பரபரப்பான ஆக்ஷன் படத்தைக் கொடுத்து முன்னணி இயக்குனர்களையும் ஆச்சரியப்பட வைத்தார் வெங்கட் பிரபு. அஜித்தின் வெற்றிப் படங்களின் வரிசையில் மட்டுமல்லாது, சிறந்த படங்களின் வரிசையிலும் 'மங்காத்தா' படத்திற்கு ஒரு முக்கிய இடமுண்டு.


அஜித் நடித்த 'ஜி' படத்தில் அவருடைய நண்பனாக சிறு கதாபாத்திரத்தில் நடித்த வெங்கட் பிரபு, அஜித்தே வியக்கும் அளவிற்கு ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்து அவருடைய மனதில் இடம் பிடித்தார். 'மங்காத்தா' போன்ற ஒரு ஆக்ஷன் படத்தை அந்தக் கூட்டணி மீண்டும் கொடுக்குமா என அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in