இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
2015ம் ஆண்டு ஆரம்பமானதிலிருந்து ஒவ்வொரு பெரிய படங்களும் சரியான இடைவெளியில் வந்து வெற்றியையும், ஓரளவிற்கு வெற்றியையும் பெற்று வருகின்றன. சரியான திட்டமிடல், விளம்பரம், தியேட்டர்களைப் பிடிப்பது என முடிந்தவரை நஷ்டத்தைக் குறைக்கவும், தோல்வியைத் தவிர்க்கவும் பெரிய தயாரிப்பாளர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். ஆனால், சிறிய படங்கள் மட்டுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டு தானும் கெடுத்து அடுத்தவர்களையும் கெடுத்து வருகிறார்கள். இந்த எட்டு மாதங்களில் ஒரே நாளில் வெளிவந்த சிறிய படங்களை மட்டுமே அதிகமாகப் பார்க்க முடியும். சிறிய தயாரிப்பாளர்கள் இன்னும் தவித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
நாளை ஆரம்பமாக உள்ள செப்டம்பர் மாதத்தில் பல முக்கிய படங்களும் சிறிய படங்களும் வெளிவர உள்ளதால் அந்த மாதம் கடும் போட்டிகள் நிறைந்த மாதமாக மாற உள்ளது. செப்டம்பர் 4ம் தேதி “பாயும் புலி, சவாலே சமாளி, போக்கிரி மன்னன், 9 திருடர்கள், பானு” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. செப்டம்பர் 11ம் தேதி “யட்சன், ஸ்ட்ராபெர்ரி, மாங்கா, சிக்கிக்கு சிக்கிக்கிச்சு, ஜவ்வு மிட்டாய்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. செப்டம்பர் 17ம் தேதி “ரஜினி முருகன், மாயா, த்ரிஷா இல்லனா நயன்தாரா, 49 ஓ, உனக்கென்ன வேணும் சொல்லு,” ஆகிய படங்களும் வர உள்ளன. செப்டம்பர் 25ம் தேதி 'குற்றம் கடிதல்' படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படங்கள் தவிர செப்டம்பர் மாதத்தில் 'அஞ்சுக்கு ஒண்ணு, நானாக நானில்லை, நாளை முதல் குடிக்க மாட்டேன்,' ஆகிய படங்களும் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, மொத்தமாக செப்டம்பர் மாதத்தில் 20 படங்களுக்கும் மேல் வெளிவர வாய்ப்புள்ளது. அக்டோபர் 1ம் தேதி 'புலி' படம் வெளிவர உள்ளதால் அதற்கு முன்பாகவே படங்களை வெளியிட சிறிய தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.