'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா, பின்னர் 'பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். இருந்தாலும் கதாநாயகியாக நடித்த சமந்தாவின் ஆரம்ப காலப் படங்கள் சரியாகப் போகவில்லை. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக நடித்தார் சமந்தா. அந்தப் படம் அங்கு பெரிய வெற்றி பெறவே தொடர்ந்து தெலுங்குக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார். அவரைத் தமிழிலும் யாரும் நடிக்க அழைக்கவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து அவர் நடித்து வெளிவந்த 'நான் ஈ' படம் வெற்றி பெறவே மீண்டும் தமிழில் வலம் வர ஆரம்பித்தார்.