பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
அந்த டார்லிங் நாயகனுக்கு ஆரம்பத்தில் இருந்தே தாரா நடிகையுடன் டூயட் பாட வேண்டும் என்பது பெருங்கனவாக உள்ளதாம். அந்த ஆசையில்தான் தான் நடிக்கும் படத்திற்கு த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என்று பெயர் வைத்தபோது பேரானந்தம் அடைந்தாராம். அதே வேகத்தில் மேற்படி நடிகையுடன் டூயட்டும் பாடி விட வேண்டும் என்று திட்டமிட்ட டார்லிங் நாயகன், தான் நடிக்கயிருக்கும் ஆக்சன் படமொன்றில் தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளார் நடிகர். ஆனால், அவர்கள் சொன்ன கதை, கேரக்டர் எல்லாவற்றையும் வாய்திறக்காமல் கேட்ட நடிகை, இதுவரை தான் எந்த படத்துக்கும் வாங்காத ஒரு பெரிய சம்பளத்தை கேட்க மட்டுமே வாயை திறந்தாராம். விளைவு, டார்லிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அத்தனை பேருமே வாயடைத்து நின்றார்களாம். கொஞ்சம் பார்த்து சொல்லக்கூடாதா? என்று கேட்டதற்கு, வளரும் நடிகர்களுடன் நடிப்பதெற்கெல்லாம் வளைந்து கொடுக்கும் அளவுக்கு என் மார்க்கெட் ஒன்றும் இறங்கி விடவில்லையே என்றும் நறுக்கென்று சொல்லிவிட்டாராம் தாரா. பாவம் டார்லிங்ஜி, இடம்தெரியாமல் காலை விட்டு விட்டோமே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார்.