தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தாமிரபரணி பானுவின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வாரம் நடைபெற்றது. கேரளாவின் பிரபல பாடகியான ரிமி டாமியின் சகோதரரான ரிங்கு டாமி தான் மணமகன்.. இவர்களது திருமணம் இன்று காலை கேரளாவில் எர்ணாகுளத்தில் உள்ள புனித ஜார்ஜ் சர்ச்சில் நடைபெற்றது. தனது திருமண செய்தி வெளியானபோதே, திருமண நாளில் தங்களது கிறித்துவ பாரம்பரியமான சட்ட - முண்டு (சட்டை - வேட்டி) உடை அணிந்துதான் திருமணம் செய்துகொள்ள விருப்பம் என கூறியிருந்தார்.
அதன்படியே இன்று (Aug 30) மணப்பெண் அலங்காரம் செய்துகொண்டு, சட்ட - முண்டு உடுத்தி திருமண சடங்குகளில் பங்கெடுத்துக்கொண்டார் பானு.. இந்த நிகழ்வில் இரண்டு குடும்பத்தினரின் நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மார்க்கம் களி என்கிற கேரள பாரம்பரிய நடனத்தை பயிற்சிபெற்ற கிறித்துவ பெண்கள் ஆடினார்கள். அதன்பின் கோகுலம் பார்க் ஹோட்டலில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரையுலகை சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.