தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் ஆண்டனி நடித்து வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடித்தவர் சுஷ்மாராஜ். தாய்மொழியான கன்னடத்தில் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்த இவர், தமிழில் குத்து ரம்யா விட்டுச்சென்ற இடத்தை பிடித்து விடவேண்டும் என்ற நோக்கத்தில்தான் என்ட்ரி கொடுத்தார். அதற்கேற்றவாறு அதிரடியான ஹீரோயினாக நடிக்கவும் தன்னை தயாராக வைத்திருந்தார்.
இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் படத்தின் ஆடியோ விழா நடந்தபோது, அனுஷ்கா சாயலில் சுஷ்மாராஜ் இருப்பதாக சொன்னவர்கள், அடுத்த அனுஷ்கா இவர்தான் என்றும் சொல்லி அவரை உற்சாகப்படுத்தி விட்டனர். அதனால் குத்து ரம்யா இடத்தை பிடிக்க வந்த சுஷ்மாராஜ், அனுஷ்கா இடத்தையே பிடித்து விடலாம் போல் தெரிகிறது என்று அதிக நம்பிக்கையுடன் கோடம்பாக்கத்தில் டேரா போட்டு படவேட்டையில் ஈடுபட்டார்.
ஆனால் இப்போதுவரை அவருக்கு தமிழில் எந்த புதிய படமும் கமிட்டாகவில்லை. இதற்கு முதல் காரணம், அவர் தமிழில் நடித்த முதல் படமே ஓடவில்லை. அடுத்த காரணம், சுஷ்மாராஜை அழகாக காட்டுவது கேமராமேன்களுக்கு பெரிய சவாலான விசயமாம். ஏனென்றால் அவரது மூக்கு சற்று எடுப்பாக இருக்கும். அதை அழகாக காண்பிக்க சில கோணங்களில் மட்டுமே முடியுமாம். அதனால் ரிஸ்க் எடுத்து இந்த நடிகையை வைத்து படமெடுக்க வேண்டுமா? என்று சிலர் யோசித்து விட்டனர். விளைவு, இப்போது தமிழ் சினிமா மீது வைத்திருந்த அத்தனை நம்பிக்கைகளும் கலைந்து விட பெங்களூ ருக்கே பறந்து விட்டார் சுஷ்மாராஜ்.