Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜி.வி.பிரகாஷ், ராம் சரண் படங்களின் பெயர் 'ப்ரூஸ் லீ'

30 ஆக, 2015 - 09:52 IST
எழுத்தின் அளவு:
Bruce-lee-title-kept-both-Ram-Charan-Teja-and-G.V.Prakash-kumar

ப்ரூஸ் லீ என்ற பெயரைத் தெரியாதவர்கள யாரும் இருக்க மாட்டார்கள். ஹாங்காங் நடிகரான ப்ரூஸ் லீ, அவருடைய சண்டைப் படங்களுக்காகவே அதிகம் பேசப்பட்டவர். இளம் வயதிலேயே மரணமடைந்தவரின் இறப்பில் பல மர்மங்கள் இருப்பதாக இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட உலகப் புகழ் வாய்ந்த நடிகரின் பெயரில் தமிழ், தெலுங்கில் தனித் தனியாக இரண்டு படங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் அடுத்து நடிக்க உள்ள ஒரு படத்தின் பெயர் 'ப்ரூஸ் லீ''. இப்படத்திற்கான முதல் பார்வை கடந்த ஜுலை மாதம் 27ம் தேதியே வெளியிடப்பட்டது. பாண்டிராஜின் உதவியாளரான பிரஷாந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். கடந்த சில நாட்களாகக் கூட இந்தப் படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார் என செய்திகள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.


இந்நிலையில் தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடிக்கும் புதிய படத்திற்கும் 'ப்ரூஸ் லீ' என்று பெயரிட்டிருக்கிறார்கள். இது பற்றிய அறிவிப்பு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரபல இயக்குனரான ஸ்ரீனு வைட்லா இயக்குகிறார். பெயருடன் கூடிய படத்தின் முதல் பார்வையை நேற்று முன் தினம் 28ம் தேதிதான் வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தில் ராம் சரண் ஸ்டன்ட் மாஸ்டராக நடித்துள்ளார். ப்ரூஸ் லீ என்ற பெயர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் தமிழ்ப் படத்திற்கு முதலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே பெயரில் தற்போது ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்திற்கும் வைத்துள்ளார்கள். எப்படியோ ப்ரூஸ் லீ பெயரைக் கெடுக்காமல் இருந்தால் சரி...

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in