ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகுபலி மற்றும் ருத்ரம்மா தேவி படங்களை முடித்த கையோடு திருமணம் செய்து கொள்வதாக பெற்றோரிடம் கூறியிருந்த அனுஷ்கா, தற்போது, இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்து வருவதுடன், மேலும் சில படங்கள் சம்பந்தமாகவும் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால்,
அவரது பெற்றோரோ, 33 வயதாகி விட்டது; அதனால், உடனே திருமணம் செய்தாக வேண்டும்... என்று அனுஷ்காவுக்கு தீவிரமாக வரன் பார்க்கத் துவங்கியுள்ளனர். அவர்கள் எதிர்பார்ப்பது போன்று வரன் செட்டாகி விட்டால், அடுத்த ஆண்டு துவக்கத்தில், அனுஷ்காவுக்கு கெட்டி மேளம் கொட்டி விடுவர். காலத்தே பயிர் செய்!
— எலீசா