மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
டோலிவுட்டில் நடிகை சுவாதி பேயாக மாறி ரசிகர்களை பயமுறுத்த தயாராகிவிட்டார். நாயகியை மையப்படுத்திய திகில் திரைப்படமான திரிபுரா படத்தை இயக்குநர் ராஜ் கிரண் இயக்கியுள்ளார். நாயகியாக நடிகை சுவாதி நடித்துள்ளார். திரிபுரா படத்தில் நடிகர் நவீன் சந்திரா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகை அஞ்சலி நடித்த கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கிரேசி மீடியா பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படுள்ளது. யட்சன்,யாக்கை போன்ற தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியுள்ள சுவாதியின் நடிப்பில் இறுதியாக தமிழில் திரைக்கு வந்த வடகறி படம் வெற்றிப்படமாக அமையவில்லை. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் சுவாதி நடித்துள்ள திரிபுரா படம் தமிழ் மற்றும் கன்னடத்திலும் வெளியாகும் என கூறப்படுகின்றது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.நேற்று வெளிவந்த இப்படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்..