டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சூர்யா நடித்த படங்களிலேயே மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் மட்டுமல்ல மாபெரும் தோல்வியடைந்த படமும் அஞ்சான் படம்தான்.
அதுமட்டுமல்ல சமூகவலைத்தளங்களில் அதிகமாக கேலியும் கிண்டலும் செய்யப்பட்ட படமும் அஞ்சான்தான்.
2014ல் வெளிவந்த அப்படத்தைத் தயாரித்து இயக்கிய லிங்குசாமிக்கு ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் பின்னடைவை ஏற்படுத்திய படமும் அஞ்சான் படம்தான் என்று திரையுலகில் இன்றளவும் சொல்லப்படுகிறது. இத்தனை மைனஸ்பாயிண்ட்களைக் கொண்டுள்ள சூர்யாவின் அஞ்சான் திரைப்படம், காலங்கடந்த அதாவது 2015 ல் சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்திருக்கிறது. அதாவது அஞ்சான் படத்துக்காக, யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், சூர்யா பாடிய ஏக் தோ தீன்... பாடல் வீடியோ யு டியூப்பில் 1 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. இது சந்தேகமில்லாமல் புதிய சாதனைதான். சூர்யா பாடிய முதல் பாடலே இதுதான். தமிழ் சினிமா பாடல் வீடியோக்களைப் பொறுத்தவரை 1 கோடியே 50 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு முதல் இடத்தில் இருப்பது, 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி... வீடியோ பாடல்தான். அனிருத்தின் இசையில் தனுஷ் பாடிய இந்தப்பாடலுக்கு அடுத்து இரண்டாம் இடத்தைஅஞ்சானின் ஏக் தோ தீன்... பாடல் வீடியோ பிடித்திருக்கிறது.
தங்களின் அபிமான ஹீரோ பாடிய முதல் பாடலே சாதனை படைத்துள்ளதைக் கொண்டாடும்வகையில் இந்த விஷயத்தை ட்விட்டரில் சந்தோஷமாக பகிர்ந்து வருகின்றனர் சூர்யாவின் ரசிகர்கள்.