பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஷால், காஜல் அகர்வால் நடித்துள்ள பாயும்புலி படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ளது. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 4ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திலையில் பாயும்புலி படத்தை செங்கற்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சி ஏரியாவில் திரையிட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
ரஜினி நடித்த லிங்கா படத்தை வாங்கி வெளியிட்ட வேந்தர் மூவீஸ் படத்தின் தயாரிப்பாளரிடம் பெற்ற நஷ்டஈட்டை மேற்கண்ட ஏரியாவில் உள்ள தியேட்டர்களுக்கு தராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தியேட்டர் அதிபர்களின் இந்த முடிவுக்கு தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தயாரிப்பாளர்களின் வியாபார உரிமையை முடக்கும் செயல் என்று அது கூறியுள்ளது.