ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'யாமிருக்க பயமே' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் டீகே, தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மீண்டும் இணைந்துள்ள படம் 'கவலை வேண்டாம்'. இந்தப் படத்தில் ஜீவா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஜீவா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஃபோட்டோ ஷுட்டும் நடைபெற்றது. அந்தப் புகைப்படங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. ஆனால், அந்த ஃபோட்டோ ஷுட்டுக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் , படத்திற்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார். தயாரிப்பு நிறுவனமும் அவரிடம் தொடர்ந்து பேசியதில் கீர்த்தி சுரேஷ் பிடி கொடுக்காமல் பேசியிருக்கிறார்.