ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாக்களை பொறுத்தவரை, அது மோகன்லால் அல்லது மம்முட்டி நடித்த படங்களாக இருந்தாலும் கூட, தங்களது சில படங்களில் காட்சிக்கேற்றவாறு ரஜினி, கமல் இருவரின் பெயர்களை, படங்களை பயன்படுத்துவார்கள்.. இது ஒரு வகையில் மலையாளத்தில் உள்ள தமிழ் ரசிகர்களை வசியப்படுத்தும் தந்திரம் தான் என்றாலும் அதிலும் யதார்த்தம் மீறாமல் அதை செய்வார்கள்.. சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'லோஹம்' படத்திலும் இதேபோன்ற நிகழ்வு அரங்கேறியது..
படத்தில் காமெடி நடிகர் அஜு வர்கீஸ் ஆட்டோ ட்ரைவராக, மோகன்லாலுக்கு தெரிந்த நண்பராக நடித்துள்ளார். இவர் மோகன்லாலை பார்ப்பதற்காக தனது ஆட்டோவில் வந்து இறங்குவார். அப்போது மாடியில் இருந்த மோகன்லால் கீழே ஆட்டோவில் வந்திறங்கிய அஜுவை பார்த்து 'பாட்ஷா' படத்தில் இடம்பெற்ற “நான்.. ஆட்டோகாரன்.. ஆட்டோகாரன்” பாடலில் சில வரிகளை ரசித்து பாடுவார்.. ஒரு சூப்பர்ஸ்டார் இன்னொரு சூப்பர்ஸ்டார் பாடலை பாடுவது என்பது அபூர்வமான நிகழ்வு தானே. தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்கள் இந்த இடத்தில் ஆரவாரம் செய்வதை கண்கூடாக பார்க்க முடிந்தது..