இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினி கதாநாயகியாக நடிப்பதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அவர் மட்டுமல்ல அவரது தங்கையான ஷாம்லியும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான். 90 களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய பேபி ஷாம்லி, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். ராமநாராயணனின் இயக்கத்தில் ஷாம்லி நடித்த துர்கா என்ற படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
கடைசியாக இவர் தமிழில் நடித்த படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். ராஜீவ்மேனனின் இயக்கத்தில் தாணுவின் தயாரிப்பில் 2000ல் வெளிவந்த இப்படத்தில் தபு மற்றும் ஐஸ்வர்யா ராயின் தங்கையாக நடித்திருந்தார் ஷாம்லி. குமரியான பிறகு 2009ல் வெளிவந்த ஓய் என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார்.
அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினாலோ என்னவோ, அப்படத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தார் ஷாம்லி.