Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜேஷ் எம். இயக்கும் குடியும் குடித்தனமும்

27 ஆக, 2015 - 15:26 IST
எழுத்தின் அளவு:
M.Rajeshs-new-movie-name

இளையதலைமுறையை குடிகாரர்களாக்கியே தீருவது என்ற கொள்கை வைத்திருக்கிறாரோ என்று எண்ணுமளவுக்கு தொடர்ந்து சரக்கடிக்கும் படங்களையே இயக்கி வருகிறார் ராஜேஷ் எம். இவரது லேட்டஸ்ட் படமான வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தில் குடிக்கும் காட்சிகள் அதிகமாகவே இருந்தன.


அதனாலேயே பெண்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸ் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தைப் பார்க்க தியேட்டர்களுக்கு வரவில்லை.


அதனால் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு வசூலும் இல்லாமல்போனது. வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படம் வெளியாவதற்கு முன்பு அப்படத்தின் தலைப்பை வி.எஸ்.ஓ.பி. என்று மதுவின் பெயரால் குறிப்பிடுவதற்கே எதிர்ப்பு கிளம்பியது. இத்தனைக்குப் பிறகும் கூட ராஜேஷ் தன் பாணியை மாற்றிக் கொள்ளவில்லை. ஜீவாவை வைத்து அடுத்தப் படத்தை இயக்க உள்ள ராஜேஷ் அந்தப் படத்துக்கு குடியும் குடித்தனமும் என்று தலைப்பு வைத்திருக்கிறார். இப்படி ஒரு தலைப்பை தன் படத்துக்கு ராஜேஷ் வைத்துள்ளது தெரிய வந்ததும் மீடியாக்கள் அவரிடம் இது குறித்து கேட்டபோது அப்படி ஒரு தலைப்பை நான் வைக்கவில்லை என்று மறுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல எல்லா தமிழ்சினிமாவிலும் குடிக்கும் காட்சிகளும் டாஸ்மாக் பாடல்களும் உள்ளன. என்னை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன் என்றும் கோபப்பட்டிருக்கிறார்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in