Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சிறந்த இயக்குநர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் : சயீப் அலி கான்

27 ஆக, 2015 - 08:45 IST
எழுத்தின் அளவு:
Only-want-to-work-with-good-directors--Saif-Ali-Khan

சிறந்த இயக்குநர்கள், சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்புவதாக சயீப் அலி கான் கூறினார்.


பாலிவுட் திரையுலகின் காமெடி மற்றும் ரொமான்டிக் படங்களில் தவறாது இடம்பிடிப்பவர் சயீப் அலி கான். சயீப் அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள பான்டோம் படம் விரைவில் வெளியாக உள்ளது. அதற்கான புரோமோஷன் பணிகளில் பிஸியாக இருந்தபோதிலும், பான்டோம் படத்தின் படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இன்னபிற விஷயங்கள் குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...


பான்டோம் - பெயர்க்காரணம் என்ன?


எளிதாக சொல்ல வேண்டுமென்றால், பான்டோம் என்றால் பேய் என்று அர்த்தம். ஆனால், இப்படத்தில், அந்த அர்த்தத்தில் இல்லாமல், கடந்த காலம் மற்றும் எதிர்காலம் குறிந்த சிந்தனை இல்லாமல், தன்னையும், தன் மனதிற்கு பிடித்தவரை பற்றியே சிந்திக்கும் மனிதன் ஆவான். அவனது கேரக்டர், யாருக்கும் அவ்வளவு எளிதில் புலப்பட்டுவிடாது. அத்தகைய குணாதிசயங்கள் கொண்ஙட மனிதர்களை, ஒரு உளவு அமைப்பு தேடும்பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த அசாத்திய குணம் கொண்ட கேரக்டரில் நான் நடித்துள்ளேன்.


பான்டோம் எந்தமாதிரியான படம்? ஏஜென்ட் வினோத் படத்தை ஒத்ததா?


பான்டோம் படம் ஆக்ஷன் படம். இது மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அறிவியல் தொடர்பான காட்சிகளும் அதிகளவில் இடம்பெற்றுள்ளதால், இதை ஆக்ஷன் படமட்டுமல்லாது, பிக்ஷன் படம் என்றும் சொல்லலாம். ஏஜென்ட் வினோத் படத்தில் நான் நடித்த அதே ரோலிலேயே, இந்த பான்டோம் படத்திலும் நடித்துள்ளேன். ஏஜென்ட் வினோத் படத்தை, இப்படத்திற்கான ஒத்திகை என்றே நான் கருதுகிறேன். பான்டோம் படத்தின் கதை, மிகவும் சீரியசானது என்ற போதிலும், மக்கள் அதை வரவேற்பர் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது.


காத்ரீனா கைப் உடன் இணைந்து நடித்தது குறித்து..


காத்ரீனா சிறந்த அழகி மட்டுமல்லாது, சிறப்பாக நடிக்கவும் கூடியவர். அவருடன் இணைந்து நடித்தது உன்னத அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் காத்ரீனா கைப்பின் நடிப்பை அனைவரும் உணர்வர். அந்தளவிற்கு தனது கடின உழைப்பை, காத்ரீனா கைப், இப்படத்திற்காக அர்ப்பணித்திருக்கிறார்.


இந்த படத்தின் இயக்குநரும் கபீர் கான் தானே?


ஆம். பான்டோம் படத்தின் இயக்குநர் கபீர் கான் தான். இவர் தான் பஜ்ரங்கி பைஜான் படத்தின் இயக்குநர். பஜ்ரங்கி பைஜான் படத்தையும், பான்டோம் படத்தையும் சம எடையாக கருதி, தனது திறமையான இயக்கத்தால், தனது படங்களை மெருகேற்றி வருகிறார். பஜ்ரங்கி பைஜான் படத்தில், இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான உறவுகளை பற்றி பேசிய இயக்குநர் கபீர் கான், பான்டோம் படத்தில், இந்தியா மட்டுமல்லாது அதில் வாழும் குடிமக்களின் வேறொரு பக்கத்தை குறித்து விளக்கியுள்ளார்.


உங்களது படம் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறதே?


ஆம். எனது கடைசி 3 படங்கள், பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வசூலை பெற தவறிவிட்டது உண்மைதான். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நான் இத்துறையில் இருந்துவருகிறேன். நான் 50 சதவீத வெற்றியை மட்டுமே கண்டுள்ளேன். நான் நெகட்டிவ், குறும்புத்தனமான, சுயநலவாதி உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்துவந்துள்ளேன். ஆனால், அத்தகைய கேரக்டர்களில் என்னை பார்க்க, எனது ரசிகர்களுக்கு விருப்பமில்லை. அவர்கள் என்னை, நேர்மறையான, மற்றும் மென்மையான ரோல்களிலேயே பார்க்க விரும்புகின்றனர். இதன்காரணமாகவே, எனது முந்தைய படங்கள் தோல்வியை சந்தி்த்துள்ளன.இனிமேல், அந்த பரீ்ட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ள மாட்டேன். இனிமேல், சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்க உள்ளேன்.


காமெடி படங்களில் நடிப்பீர்களா?


காமெடி படங்களில் நான் நடிப்பதையே, எனது ரசிகர்கள் மிகவும் விரும்புகின்றனர். காமெடி படங்களில் நடிப்பதே எனது முதல் தேர்வாக இருக்கும், ஹம்சேகல்ஸ் படத்தின் வெற்றி்யை தொடர்ந்து, அதுபோன்ற படங்களில் நடிக்க விரும்புகிறேன். இருந்தபோதிலும், இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட காமெடி படங்களில் நடிக்க மாட்டேன். சிறந்த இயக்குநர்கள், சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்புவதாக சயீப் அலி கான் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in