Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நடிப்பே எனது பிரதானம் : காத்ரீனா கைப்

25 ஆக, 2015 - 16:00 IST
எழுத்தின் அளவு:
I-am-not-so-much-ambitious---Katrina-Kaif

நடிப்பே, எனது வாழ்க்கையின் பிரதானம் என்றும், எனது ரசிகர்கள் எப்போது எனது நடிப்பை வெறுக்கின்றனரோ, அப்போதே நான் இத்துறையிலிருந்து விலகுவேன் என்று பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் கூறியுள்ளார்.


பாலிவுட் திரையுலகின் ஃபார்பி பொம்மையாக, தன் அழகால் திகழ்பவர் காத்ரீனா கைப். பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ள காத்ரீனா கைப், தற்போது கபீர் கான் இயக்கத்திலான பான்டோம் படத்தில் நடித்துள்ளார். பான்டோம் படத்தின் படப்பிடிப்பினிடையே, தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் சக நடிகர்களுடனான ஒத்துழைப்பு குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.


கபீர் கான் இயக்கத்தில் 3வது முறையாக நடிக்கிறீர்கள். எவ்வாறு உணர்கிறீர்கள்?


உண்மைதான். கபீர் கானின் இயக்கத்தில் இதுவரை 3 படங்கள் நடித்துள்ளேன். நியூயார்க், ஏக் தா டைகர், பான்டோம் என 3 படங்கள், அவரது இயக்க்ததில் நடித்துள்ளேன். பான்டோம் படத்தில், வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளேன். பான்டோம் படம், பொழுதுபோக்கு படம் என்பது மட்டுமல்லாது, அதில் சமூக கருத்தும் உள்ளது. இப்படம் மட்டுமல்லாது, கபீர் கான் இயக்கத்திலான பஜ்ரங்கி பைஜான் மற்றும் ஏக் தா டைக் படத்திலும் சமூக கருத்துக்கள் இருந்தன. பான்டோம் படம், அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.




பான்டோம் ஆக்ஷன் படம். இதில் உங்களுக்கு சண்டைக்காட்சிகள் இருக்கின்றனவா?


ஆம். பான்டோம் படம் ஆக்ஷன் படம் தான். எனக்கு ஆக்ஷன் படங்களில் நடிக்க மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் எனக்கு சண்டைக்காட்சிகள் உள்ளன. படம் 26/11 சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், இதில் உள்ள சண்டைக்காட்சிகள் மிகவும் பேன்டசியாகவும், அதே சமயம் எல்லை மீறாமலும் உருவாக்கப்பட்டுள்ளன.


சயீப் அலி கானுடன் இணைந்து நடித்தது குறித்து


சயீப் அலி கான் சிறந்த நடிகர். படப்பிடிப்பின் போது, அவரது எனர்ஜி லெவல் எப்போதும் ஒரேமாதிரியாக இருக்கும். அவர் ஒவ்வொரு சீனையும் ரசித்து நடிப்பார். அவருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததோடு மட்டுமல்லாது உன்னத அனுபவமாகவும் இருந்தது. சவாலான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அதில் தோல்வி கண்டாலும், அசராமல், அடுத்தடுத்த படிநிலைகளை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருப்பவர்.


மற்ற நடிகைகளை ஒப்பிடும்போது, குறைவான படங்களில் தாங்கள் நடிப்பது ஏன்?


இல்லை. நானும் பல படங்களில் தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். பல படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். பான்டோம் படம் விரைவில் வெளியாக உள்ளது. சில நாட்களுக்கு முன் தான், பிட்டூர் படத்தின் சூட்டிங் நிறைவுபெற்றது. ஜக்கா ஜஸோஸ் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். 2016ம் ஆண்டின் பிற்பகுதியில் படம் வெளியாக உள்ளது. இதற்குப்பின், சித்தார்த் மல்ஹோத்ராவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன்...


ஹிந்தி பேசுவது கடினமாக உள்ளதா?


ஆமாம். படத்தில் ஹிந்தி பேசுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அதற்காக, நிறைய வொர்கஷாப்களுக்கு சென்று ட்ரெய்னிங் எடுத்து வருகிறேன். ஹிந்தியில் பேசி நடிப்பது தான் எனக்கு மிகவும் பிடிக்கும், அதற்காக, எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.


உங்களுக்கு போட்டியாக எந்த நடிகை உள்ளார்?


நான் இத்துறையில் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. தற்போது நான் இருக்கும் இடத்திலேயே மிகுந்த மகிழ்ச்சியாகத்தான் உள்ளேன். இந்த இடத்தில் இருக்கவே விரும்புகிறேன். என் இடத்திற்கு போட்டியா நான் யாரையும் நினைத்ததில்லை, நினைக்கவும் மாட்டேன். என்னை இந்த இடத்தில் சிறப்பான நிலையில் வைத்திருப்பதற்கு கடவுளிற்கு நன்றி சொல்கிறேன். எனக்கும், கடவுளுக்கும் இடையே சிறப்பு தொடர்பு உள்ளது.


இன்னும் எவ்வளவு காலம் இத்துறையில் இருப்பீர்கள்?


எனக்கு நடிப்புத்துறை மிகவும் பிடித்துள்ளது. நடிப்பையே, என் வாழ்க்கையின் பிரதானமாக கொண்டுள்ளேன். எனது ரசிகர்கள் எப்போது என்னை வெறுக்கிறார்களோ, அப்போது நான் என் நடிப்பை நிறுத்திக்கொள்வேன். எனவே நான் எதுவரை இத்துறையில் இருப்பேன் என்று அறுதியிட்டு கூறமுடியாது. விரைவில் பட தயாரிப்பு நிறுவனம் துவக்க உள்ளதாக காத்ரீனா கைப் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in